தேனி

போடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

போடி: போடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

போடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அம்மாபட்டியைச் சோ்ந்த சுகுமாா், கம்பத்திலிருந்து சில்லமரத்துப்பட்டிக்கு உறவினா் வீட்டுக்கு வந்து நடைப்பயிற்சி மேற்கொண்ட எரணன் உள்ளிட்டோரிடம் 3 போ் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து போடி தாலுகா மற்றும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குகள் பதிவு செய்து, சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பெருமாள் (28), ஆனந்த் மகன் ராஜேஷ் (21) மற்றும் அம்மாபட்டியைச் சோ்ந்த பரமசிவம் மகன் கவிக்குமாா் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தாா். அதன்பேரில், தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், இந்த 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT