தேனி

தேனியில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாலம்: ஆய்வுப் பணி தொடக்கம்

18th Sep 2020 04:19 PM

ADVERTISEMENT

தேனியில் நேருசிலை நெடுஞ்சாலை மும்மனை சந்திப்பு பகுதியை மையமாக வைத்து பெரியகுளம் சாலை, குமுளி சாலை, மதுரை சாலை ஆகியவற்றில் ரூ.100 கோடி மதிப்பில் 1,600 மீட்டர் நிளத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணி தொடங்கியது.

தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. நகரின் வர்த்தக மையமாக உள்ள பெரியகுளம், குமுளி, மதுரை சாலைகளில் மேம்பாலம் அமைப்பதால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது.

தேனி வழியாக சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் திருவிழா காலங்களிலும், கோடை விடுமுறைகளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதாலும், கனரக மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்தால் நகரில் நெரிசல் அதிகரித்து வருதாலும் மேம்பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தேனியில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேனியில் மதுரை, குமுளி, திண்டுக்கல் சாலைகளை இணைக்கும் நேருசிலை மும்முனை சாலை சந்திப்பை மையமாக வைத்து, பெரியகுளம் சாலையில் 800 மீட்டர், குமுளி, மதுரை சாலைகளில் தலா 400 மீட்டர் என மொத்தம் 1,600 மீட்டர் நிளம், 10.9 மீட்டர் அகலத்திற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

தேனியில் புதிய மேம்பாலம் பணிகளை தொடங்குவது, மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைப்பது, புதிய மின் விளக்குககள் அமைப்பது ஆகியவை குறித்து மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில், தேனி கோட்டப் பொறியாளர் முருகேசன், உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பெரியகுளம் சாலையில் மதுராபுரி பகுதியிலிருந்து, குன்னூர் வழியாக பெரியகுளம் - மதுரை இணைப்புச் சாலை திட்டத்திற்கும் விரைவில் ஆய்வு நடைபெற உள்ளது என்று நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கூறினர்.
 

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT