தேனி

மகாளய அமாவாசை: சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்

17th Sep 2020 01:15 PM

ADVERTISEMENT

கம்பம் அருகே சுருளி அருவிக்கு மகாளய அமாவாசைக்கு வந்த பக்தர்கள் தர்ப்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

தேனி மாவட்டம் மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவிக்கு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி போன்ற சடங்குகள் செய்ய சுருளி அருவிக்கு வருவது வழக்கம். இவ்வருடம் கரோனா ஊரடங்கு கடந்த மார்ச் 25 முதல் அமலில் இருப்பதால் சுருளி அருவிக்கு பக்தர்கள் வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக நினைத்து பெரும்பாலான பொதுமக்களும் பக்தர்களும் சுருளி அருவிக்கு கார், பைக் போன்ற வாகனங்களில் அதிகாலையிலேயே வரத் தொடங்கினர். 

ஆனால் மாவட்ட நிர்வாகம் அறிக்கையை பக்தர்கள் வர வேண்டாம் என்று புதன்கிழமை அறிவித்தது. இதனால் சுருளி அருவிக்கு செல்லும் முக்கிய சாலையான சுருளிப்பட்டி சாலையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு சுருளி அருவிக்கு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர். ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள் சுருளி ஆற்றங்கரை ஓரங்களில் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்துவிட்டு திரும்பினார்.

 இது குறித்து கம்பம் ரேஞ்சர் (பொறுப்பு) பெ.அருண் குமார் கூறியதாவது, ஊடரங்கு தடை நீடிப்பதால் ஏற்கனவே பக்தர்கள் பொதுமக்கள் சுருளி அருவிக்கு வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு எவ்வித தளர்வும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. எனவே ஏற்கனவே உள்ள தடை தொடர்கிறது என்றார்.

ADVERTISEMENT

இதுபற்றி மதுரையிலிருந்து சுருளி அருவிக்கு வந்த சரவணன் செல்வி தம்பதியினர் கூறியது, ஊரடங்கு தளர்வு என்பதால் முன்னோர் வழிபாடு செய்ய வந்தோம், காவல்துறையினர் தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். முன்கூட்டியே தெரிந்திருந்தால் நீண்ட தூரம் பயணம் செய்யாமல் உள்ளூரிலேயே வழிபாடு செய்து இருப்போம். 

எங்களைப்போல் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்றார்.
 

Tags : theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT