தேனி

கம்பம் நகரில் நெரிசலை தவிர்க்க அறிவிப்பு பலகைகள் அமைப்பு

14th Sep 2020 11:51 AM

ADVERTISEMENT

கம்பம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவல்துறையினர் அறிவிப்பு பலகைகளை சாலை ஓரங்களில் திங்கட்கிழமை அமைத்தனர்.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், கம்பம், தேனி, குமுளி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்களை, அதன் ஓட்டுநர்கள் சாலையின் ஓரங்களில் நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்பவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் இதே போல் அரசமர வீதி, வேலப்பர் கோவில் தெரு, காந்திஜி வீதி, கம்பம்மட்டு சாலை, வடக்கு காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதன் எதிரொலியாக கம்பம் போக்குவரத்து ஆய்வாளர் அ.தட்சிணாமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் ஜாஹிர் உசேன், சுந்தர பாண்டியன், கணேசன், மனோகரன் உள்ளிட்ட காவலர்கள் சாலையின் இருபுறங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கயிறுகளை அமைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உண்டான அறிவிப்பு பலகைகளை அமைத்து அமைத்தனர்.

இதுபற்றி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தட்சிணாமூர்த்தி கூறுகையில், கம்பம் நகரின் முக்கிய சாலைகளில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT