தேனி

உத்தமபாளையத்தில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை மையத்தில் பாதிப்பு: மாணவர்கள் அவதி

14th Sep 2020 12:11 PM

ADVERTISEMENT

உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இணையதளம் சேவை முடங்கி இருப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கரோனா நோய் தொற்று பரவ காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இணையதளம் வழியாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தநிலையில் உத்தமபாளையம் தொலைத்தொடர்பு சேவை மையம் மற்றும் சுற்றியுள்ள கோம்பை, ராயப்பன்பட்டி, கம்பம் என பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை முடங்கி சரிவர வேலை செய்யவில்லை. 

இதன் காரணமாக ஆன்லைன் வகுப்பில் பங்குபெற முடியாத நிலையில் பல மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளன. இதுகுறித்து உத்தமபாளையம் தொலைத் தொடர்புத்துறை பணியாளர் ஒருவர் இணையதள சேவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
 

Tags : Bsnl
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT