தேனி

கேரள மாநிலத்திற்கு குமுளி வழியாக வட மாநில தொழிலாளர்கள் வருகை

11th Sep 2020 03:58 PM

ADVERTISEMENT

குமுளி வழியாக கேரள மாநிலத்தில் கூலி வேலைகளுக்குச் செல்ல வட மாநில ஆண், பெண் கூலி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை குமுளி வந்தனர்.

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் கட்டுமான தொழில் ஏலக்காய் தேயிலை தோட்டங்களில் வேலை போன்ற வேலைகளுக்கு வட மாநிலங்களைப் சேர்ந்த ஆண் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

 கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அவர்கள் வேலை செய்து வந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் அவர்களை கேரள மாநிலத்திற்குள் அழைத்து வருகின்றனர். முறையாக அவர்களுக்கு தோற்று பரிசோதனை செய்யப்பட்டு தனியார் பேருந்துகள் மூலம் அழைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

 அங்கு இ-பாஸ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்த பின்பு மாதிரிகள் எடுக்கப்படுகிறது. பின்னர் அவர்களது வேலை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களுக்கு அதன் உரிமையாளர்கள் அவர்களை பொறுப்பை ஏற்று அழைத்துச் சென்று அங்கு தனிமைப்படுத்தி வைக்கின்றனர். 

இதற்கான ஆவண சரிபார்ப்புகளை குமுளி வருவாய் துறை சுகாதாரத் துறையினர் சரிபார்த்து கூலி தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்றனர்.

 சனிக்கிழமை மட்டும் இரண்டு பேருந்துகள் மூலமாக சுமார் 120 க்கும் மேலான ஆண், பெண் தொழிலாளர்கள் குமுளி சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இதுபற்றி தமிழக வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறும் போது முறையாக இபாஸ் பெற்று,  விண்ணப்பம் செய்தவர்களை ஆவணங்களை சரிபார்த்து, அனுப்புவதற்கான, ஏற்பாடுகளை செய்கின்றனர். 

லோயர் கேம்ப் சோதனைச் சாவடியிலும் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

Tags : theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT