தேனி

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கம்பத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

8th Sep 2020 01:20 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணி, இளைஞரணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட திமுக மாணவரணி, இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இணைய வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் என். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் தங்கராஜா, நகர செயலாளர் துரை.நெப்போலியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் குரு இளங்கோ உள்ளிட்ட ஏராளமான திமுக மாணவரணி, இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT