தேனி

பெரியகுளத்தில் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா

30th Oct 2020 07:45 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நல்லாசிரியர் தெ.குப்புச்சாமி எழுதிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் இலக்கிய வட்டத்தலைவர் ஜி.கே.மணிகார்த்திக் தலைமை வகித்தார். சிறுமி பிரணவி தங்கத்துரையின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பி.ராம்குமார் முன்னிலை வகித்தார்.

பசும்பொன் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பாக நல்லாசிரியர் சு.குப்புசாமி எழுதிய 235 வது நூலான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூலை நூல் ஆசிரியர் வெளியிட ஜெயா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் ஓ.சண்முக சுந்தரம் பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர் சு.குப்புசாமி ஏற்புரை வழங்கினார்.

விழாவில் பேராசிரியர் சே.பத்மினிபாலா, வெற்றித்தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.எம்.அழகர், வடகரை நூலக வட்ட தலைவர் அகமது முஸ்தபா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டி.கள்ளிப்பட்டி பசும்பொன் இளைஞர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

Tags : Periyakulam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT