தேனி

போடியில் தேவர் ஜயந்தி: கூடுதல் பாதுகாப்பு

30th Oct 2020 10:57 AM

ADVERTISEMENT

போடியில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜயந்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. போடியில் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்குள்ள தேவர் சிலை வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

சமுதாய சங்கங்கள் சார்பிலும், அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். மேலும் பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்து வந்து பூஜை செய்வதும் வழக்கம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமுதாய சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் சேராமல் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவர் ஜயந்தியை முன்னிட்டு போடியில் டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவர் சிலை, பழைய பேருந்து நிறுத்தம், போஜன் பார்க், கட்டபொம்மன் சிலை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT