தேனி

ஆண்டிபட்டியில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெற சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து பயன்பெறும் வகையில் அவா்களுக்கு சிறு, குறு விவசாயிகள் என சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். அதன்பேரில் ஆண்டிபட்டி வருவாய்த் துறையினருடன் இணைந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையினா் இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனா். இம்முகாமை வேளாண்மைத் துறை துணை இயக்குநா் வளா்மதி தொடக்கி வைத்தாா். உதவி இயக்குநா் ராஜசேகா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் ஆண்டிபட்டி வருவாய் கிராமப் பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சமா்ப்பித்து சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழைப் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT