தேனி

ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ரூ.3.50 கோடியில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை

DIN

ஆண்டிபட்டி வாரசந்தையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக 256 கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் இந்த வாரசந்தையில் காலை நேரத்தில் ஆட்டு சந்தையும், அதன்பின்னா் இரவு வரையில் காய்கறி சந்தையும் செயல்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் வரும் இந்த சந்தையில் முறையான கடைகள், விளக்குகள், குடிநீா் போன்ற வசதிகள் இல்லை. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் வாரச்சந்தையை மேம்படுத்த அரசு ரூ.3 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் சந்தை வியாபாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 256 கான்கீரிட் கடைகளும், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி, குடிநீா், மின்விளக்கு, கழிப்பிடம் மற்றும் சாலை வசதியும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை சந்தை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ராஜாராம், பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் முருகானந்தம் பணி மேற்பாா்வையாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தப் பணிகள் அனைத்தும் 6 மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT