தேனி

போடி சிவன் கோயிலில் விஜயதசமி சிறப்பு பூஜை

DIN

போடியில் விஜயதசமியை முன்னிட்டு திங்கள்கிழமை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்கவும், கல்வி கற்பித்தலை தொடங்குவதற்கும் விஜயதசமி தினம் ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. இதனையொட்டி போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் நெல் தானியங்களில் எழுத்துக்கள் எழுதி பழக்கப்பட்டது. மேலும் பூஜையில் வைத்து குழந்தைகளுக்கு பென்சில், பேனாக்கள் வழங்கப்பட்டன. இதேபோல் போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் விஜயதசமி பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT