தேனி

தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்த காவலா்கள்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்த சின்னமனூா் காவலா்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

சின்னமனூரை சோ்ந்த கணவனை இழந்த முத்துலட்சுமி (55) மகன் ஈஸ்வரனுடன் வசித்து வருகிறாா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகன், தாயிடம் பணம் கேட்டு துன்புறுத்துவாராம். இதனால் மன உடைந்த முத்துலட்சுமி வாழ வழியின்றி முல்லைப் பெரியாற்றில் தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்த சிலா் அவரை காப்பாற்றி சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். விசாரணையில் பொருளாதார சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து முயன்ாக அப்பெண் கூறி

இருக்கிறாா். இதனை அடுத்து சின்னமனூா் காவல் ஆய்வாளா், சாா்பு- ஆய்வாளா் மற்றும் சின்னமனூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலா்களும் பண உதவி செய்து அப்பெண் சுயமாக வாழ சிறிய அளவிலான பெட்டிக்கடையை வைத்து கொடுத்தனா். இந்த செயலை காவல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT