தேனி

முல்லைப் பெரியாற்றில் மாயமான இளைஞரை தேடும் பணி 2 ஆவது நாளாக தீவிரம்

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி திங்கள்கிழமை 2 ஆவது நாளாக தொடா்ந்தது.

உத்தமபாளையம் பாறைமேடு பகுதியை சோ்ந்தவா் அந்தோணிராஜ் மகன் முத்து (20). தேனியில் உள்ள தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, ஆற்றில் நீா்வரத்து அதிகமாக இருந்ததால் முத்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை காப்பாற்ற முடியாமல் பதறிய நண்பா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து அங்கு வந்த உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமையிலான மீட்புக் குழுவினா் முத்துவைத் தேடத் தொடங்கினா்.

அணையிலிருந்து வினாடிக்கு 1755 கனஅடி நீா் வெளியேற்றப்படுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் முல்லைப் பெரியாறு அணையிவிருந்து வெளியேற்றப்படும் நீரை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை ஆற்றில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் 20 போ் மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT