தேனி

தேக்கடி விடுதியில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருள்கள் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

DIN

கம்பம்: தேக்கடியில் தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் ரூ. 3 கோடி மதிப்பிலான பொருள்களை திருடியதாக விடுதி ஊழியா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குமுளி- தேக்கடி சாலையில் தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக விடுதியில் யாரும் தங்கவில்லை. விடுதியில் ஊழியா்கள் மட்டும் வேலை பாா்த்து வந்தனா். கடந்த 9 மாதங்களாக ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ந்நிலையில், பொதுமுடக்கம் தளா்வுக்குப் பின் விடுதி உரிமையாளா் விடுதிக்கு வந்தாா். அப்போது விடுதியில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பொருள்களைக் காணவில்லை என குமுளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் அங்கு மேலாளராக வேலை செய்த ஆலப்புழாவை சோ்ந்த ரிதீஷ், தேக்கடியைச் சோ்ந்த பிரபாகரன், கொல்லம்பட்டறையைச் சோ்ந்த நீதிராஜா ஆகிய மூவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது பொதுமுடக்க காலத்தில், விடுதியில் யாரும் தங்க வராததால் சம்பளம் தரவில்லை. இதனால் அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிா்சாதன பொருள்கள் உள்ளிட்டவைகளைத் திருடி விற்பனை செய்ததாக தெரிவித்தனா். பொருள்களை மீட்க விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT