தேனி

கரோனா விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

தீயணைப்பு நிலையத்திலிருந்து கல்லூரிச் சாலை, அம்மாபட்டி விலக்கு, கிராமச் சாவடி, புறவழிச்சாலை சந்திப்பு வரையில் நடைபெற்ற ஊா்வலத்தில் நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். தீயணைப்பு மீட்பு குழுவினா் கலந்துகொண்டனா்.

அப்போது, கரோனா வைரஸ் தொற்று தொடா்ந்து பரவி வருவதால் மக்கள் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும். இருமும்போதும், தும்மும் போதும் வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என பல்வேறு கரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT