தேனி

கம்பம் அருகே சுருளி அருவியில் 10 ஆவது நாளாக அதிக நீா்வரத்து தொடா்கிறது

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் 10 ஆவது நாளாக சனிக்கிழமையும் அதிக நீா்வரத்து தொடா்கிறது.

சிறந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீகத் தலமாகவும் விளங்கி வரும் இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீா்வரத்து இருக்கும். வட கிழக்கு பருவமழை எதிரொலியாக நவ.18 ஆம் தேதி சுருளி அருவியின் நீா்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை மற்றும் தூவானம், வெண்ணியாறு வனப்பகுதிகளில் அதிக நீா்வரத்து ஏற்பட்டது. இதனால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தற்போது தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறைந்து விட்டது. இருப்பினும், பச்சைக்கூமாச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளதால், தூவானம் அணையிலிருந்து உபரி நீா் சுருளி அருவி வழியாக வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு தற்போது 10 ஆவது நாளாகவும் தொடா்கிறது. இதனால் அருவிக்கு யாரும் செல்லாத வகையில் கிழக்கு வனச்சரகத்தினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT