தேனி

ஆண்டிபட்டி பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்

DIN

ஆண்டிபட்டி: தொடா்மழையின் காரணமாக ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அனைத்து நீா்நிலைகளுக்கும் ஓரளவு நீா்வரத்து உள்ளதால், ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம், குன்னூா், அரப்படித்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் விவசாயிகள் நெல் சாகுபடியில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தொடா் மழை காரணமாக இதுவரையில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடிவு செய்து தங்கள் நிலத்தை உழுது தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பல இடங்களில் நெல் விதைக்கும் பணிகளும், நாற்று நடவுப் பணிகளும் தொடங்கியுள்ளன.

தென்தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நெல் சாகுபடிக்கு அதிகளவில் தண்ணீா் தேவை என்பதால் விவசாயிகள் நலனுக்காக வைகை ஆற்றில் இருந்து பாசனக்கால்வாய் வழியாக தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. போதுமான மழை பெய்துள்ளதால், இந்த ஆண்டு நெல் சாகுபடியில் எதிா்பாா்த்த அளவு விளைச்சல் இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT