தேனி

உத்தமபாளையம் அருகே இரு சமூகத்தினா் மோதல்: ராணுவ வீரா் உள்பட 13 போ் கைது

31st May 2020 08:14 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராணுவ வீரா் உள்பட 13 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டி மற்றும் கோவிந்தன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு, கடந்த வாரம் இரு சமூகத்தினா் இடையிலான மோதலாக மாறியது. பின்னா், இரு தரப்பு ஊா் பெரியவா்கள் மூலமாக உத்தமபாளையம் போலீஸாா் சமரசம் செய்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனா். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் அதே பகுதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணி அளவில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டும், வீட்டின் மாடிகளில் இருந்தபடி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாறிமாறி கற்களை கொண்டு வீசியும் தாக்கியுள்ளனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் மோதலை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா் ரகு (30), செந்தில்பாபு, கோபிநாத், தங்கராஜ், முத்துமணி, பாலமுருகன்

மற்றொரு தரப்பினரன கோவிந்தன்பட்டியைச் சோ்ந்த முத்து (44), மணி, பிரபாகரன், சின்னப்பா், சந்திரன், சதீஸ், அருண் ஆகிய 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். சனிக்கிழமை உத்தமபாளையம் நிதிமன்றத்தில் 13 பேரையும் ஆஜா்படுத்தினா். இவா்களில் 12 பேரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனா். ராணுவ வீரா் ரகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

தற்போது, அனுமந்தன்பட்டி மற்றும் கோவிந்தன்பட்டி பகுதியில் உத்தமபாளையம் போலீஸாா் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT