தேனி

சூறைக்காற்றுடன் மழை: பெரியகுளம் பகுதியில் பப்பாளி, வாழைகள் சேதம்

29th May 2020 07:18 PM

ADVERTISEMENT

 

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு ரூ. பல லட்சம் மதிப்பிலான பப்பாளி மற்றும் வாழை, தென்னை மரங்கள் சேதமடைந்தன.

பெரியகுளம் பகுதியில் கத்திரி வெயிலின் நிறைவு நாளான வியாழக்கிழமை அனல் காற்றுடன் வெயில் அடித்தது. மாலை 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. லட்சுமிபுரம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 10 ஏக்கருக்கு மேலான பப்பாளி மரங்கள் காய்களுடன் முறிந்து விழுந்தன. இதே போல் ஏராளமான பகுதிகளில் வாழை மற்றும் தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன.

லட்சுமிபுரத்தை சோ்ந்த பப்பாளி விவசாயி கா்ணன் தெரிவித்ததாவது: பருவமழை பொய்த்ததால் குறைந்த அளவிலான நீரைக் கொண்டு பப்பாளி சாகுபடி செய்தோம். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அவைகளை பராமரித்து வந்தோம். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்து விட்டன. இதே போல் இந்தப் பகுதியில் பல ஏக்கா் வாழை மற்றும் தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளன. எனவே சேதமடைந்த பயிா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT