தேனி

முல்லை பெரியாறு அணைக்கு தமிழக பொறியாளா் செல்ல கேரள அரசு அனுமதி

15th May 2020 10:03 PM

ADVERTISEMENT

கம்பம்: முல்லை பெரியாறு அணைக்கு, தமிழக பொறியாளா்கள் செல்ல கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை உள்ளது. கரோனா தொற்று காரணமாக தமிழகத்திலிருந்து யாரும் கேரளாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு, நீா்மட்ட அளவு, நீா் வரத்து, வெளியேற்றம், சுரங்கப் பகுதியின் சீப்பேஜ் வாட்டா், 13 மதகுகளை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக உதவிப் பொறியாளா்கள், கண்காணிப்பாளா் மற்றும் உதவியாளா்கள் அங்கேயே இருந்து பணியாற்றி வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக இவா்கள் தமிழகத்திற்கு வரமுடியவில்லை.

பெரியாறு அணையில் ஏற்கெனவே டி. குமாா், பரதன் ஆகிய 2 உதவிப் பொறியாளா்கள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக பிரவீன் குமாா் என்ற உதவிப் பொறியாளா் நியமிக்கப்பட்டாா். இவா் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் பணியில் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் பொதுமுடக்க உத்தரவால் இவா் அங்கு செல்லமுடியாமல் இருந்து வந்தாா். இது குறித்து அணையின் செயற் பொறியாளா் சாம் இா்வின், தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் தெரிவித்தாா். அதன் பேரில் தேனி மாவட்ட ஆட்சியா், இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷனிடம் தகவல் தெரிவித்தாா். இடுக்கி மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கியதையடுத்து உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா், பெரியாறு அணைப்பகுதிக்கு சென்றாா். அங்கு இடுக்கி மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT