தேனி

கம்பம் அருகே முதல்வா் பிறந்த நாள் விழா

13th May 2020 07:31 AM

ADVERTISEMENT

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் 66 ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட எடப்பாடியாா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி, கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள விஸ்வகா்ம காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாவட்ட அதிமுக பிரதிநிதி ரா. பால்பாண்டியன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, விழாவை தொடக்கி வைத்தாா். இதில், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் ஈசுவரி பாலன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஒ. ராஜமாணிக்கம், ஊராட்சி செயலா் மணிகண்டன் மற்றும் அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT