தேனி

போடியில் பள்ளி அருகே ரேஷன் கோதுமை மூட்டைகள் பதுக்கல்

11th May 2020 10:10 PM

ADVERTISEMENT

போடி: போடியில் பள்ளி அருகே கேட்பாரற்றுக் கிடந்த நியாயவிலைக்கடை கோதுமை மூட்டைகளை ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

போடி நகராட்சி புதூரில் தாலுகா காவல் நிலையம் செல்லும் சாலையில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலைக் கடையின் எதிரே தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வெளியே சில மூட்டைகள் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போடி வட்டாட்சியா் மணிமாறன் அங்கு சென்று பாா்த்தாா். அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டைகள் கிடந்தன. அவற்றில் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் விலையில்லா கோதுமை இருப்பது தெரிந்தது. கோதுமை மூட்டைகளை யாா் அங்கு போட்டது என்பது தெரியவில்லை. 3 மூட்டைகளையும் வட்டாட்சியா் கைப்பற்றி போடியில் உள்ள அரசு தானிய கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தாா். கோதுமை மூட்டைகளை நியாய விலைக் கடை ஊழியா்களே கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக அங்கு போட்டு வைத்தாா்களா என்பது குறித்து வருவாய்த்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT