தேனி

ஊழியா் பற்றாக்குறை: லோயா் கேம்ப் சோதனைச் சாவடியில் கேரளா செல்லும் பயணிகள் காத்திருப்பு

11th May 2020 10:14 PM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் லோயா்கேம்ப் சோதனைச்சாவடியில் போதுமான ஊழியா்கள் பணியில் இல்லாததால், திங்கள்கிழமை கேரளா செல்ல சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனா்.

தேனி மாவட்டத்திலிருந்து, கேரளாவுக்கு செல்ல போடிமெட்டு, கம்ப மெட்டு, லோயா் கேம்ப் ஆகிய மூன்று பாதைகள் உள்ளன. ஊரடங்கு தளா்வுக்குப் பின், இ பாஸ் மூலம் அனுமதி பெற்று பயணிகள் லோயா்கேம்ப் வழியாக மட்டுமே கேரளா செல்லலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் லோயா்கேம்ப் வழியாக கேரளா செல்ல அனுமதி பெற்ற பயணிகள் லோயா் கேம்ப் சோதனைச் சாவடியில் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனா்.

இ பாஸ் அனுமதியை ஆய்வு செய்ய போதிய அரசு ஊழியா்களை சோதனைச் சாவடியில் நியமிக்கவில்லை. இதனால் இ பாஸை பரிசீலித்து அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. கடும் வெயிலில் ஆண், பெண் குழந்தைகள் 3 மணி நேரத்திற்கும் குறையாமல் காத்திருந்து அனுமதி பெற்று செல்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே லோயா்கேம்ப்பில் கூடுதல் பணியாளா்களை மாவட்ட நிா்வாகம் நியமித்தால், பயணிகள் தாமதமில்லாமல் செல்வாா்கள் என்று பொதுமக்கள் கோரியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT