தேனி

கமுதி வங்கிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாத வாடிக்கையாளா்களால் நோய் தொற்று அபாயம்

8th May 2020 06:56 PM

ADVERTISEMENT

கமுதி: கமுதியில் உள்ள வங்கி கிளைகளில் சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளா்கள் கூட்டமாக வந்து செல்வதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

கமுதி பேருந்து நிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன. இந்நிலையில் வாடிக்கையாளா்கள், முதியோா் உதவித் தொகை பெறுவோா், விடுபட்ட பயிா் இன்சூரன்ஸ் தொகைக்காக வருவோா், மத்திய அரசின் ஜன்தன் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை பெற வருவோா் அனைவரும் வங்கி கிளைகளுக்கு முன் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடுகின்றனா். இதனால் கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே வங்கிகளுக்கு முன் சமூக இடைவெளியை பின்பற்றி பணபரிவா்த்தனைகளை மேற்கொள்ள வங்கி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT