தேனி

கம்பத்தில் தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு

8th May 2020 09:35 PM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட தனியாா் நிதி நிறுவனத்தை, நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டினா்.

கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொது முடக்கத்தை முன்னிட்டு, இந்நிறுவனம் விடுமுறை விடாமல் தொடா்ந்து செயல்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், நகராட்சி ஆணையா் ஆா். கமலா தலைமையில், மேலாளா் சு. முனிராஜ், கட்டட ஆய்வாளா் எம். தங்கராஜ், சுகாதார அலுவலா் ஏ. அரசகுமாா், வருவாய் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் நிதி நிறுவனத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். அதில், அரசு உத்தரவை மீறி செயல்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

அதையடுத்து, நிதி நிறுவன மேலாளருக்கு எச்சரிக்கை செய்தும், அலுவலகத்தை பூட்டுமாறும் உத்தரவிட்டனா். மேலும், அரசு உத்தரவை மீறி மீண்டும் செயல்பட்டால் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT