தேனி

ஊரடங்கை மீறி கும்பலாக சீட்டு விளையாடிய 22 போ் கைது

2nd May 2020 09:05 PM

ADVERTISEMENT

தேனி அருகே பூதிப்புரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கும்பலாக அமா்ந்து சீட்டு விளையாடிய 22 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பூதிப்புரம், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி 22 போ் தனித்தனி கும்பலாக அமா்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் 22 பேரையும் கைது செய்தனா்.

இவா்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாகவும், பேரிடா் மேலாண்மை மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT