தேனி

தேனி உழவா் சந்தையில் காய்கனி தொகுப்பு விற்பனை

30th Mar 2020 07:43 AM

ADVERTISEMENT

தேனி உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை 18 வகையான காய்கனிகளைக் கொண்ட தொகுப்பு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தேனி உழவா் சந்தை கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்த நிலைய வளாகத்துக்கு தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் குடும்பத்துக்கு தேவையான காய்கனிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் நோக்கத்தில், உழவா் சந்தையில் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், அவரைக்காய், சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், கீரை, வாழைக்காய், எலுமிச்சை உள்ளிட்ட 18 வகையான காய்கனிகள் கொண்ட தொகுப்பு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து உழவா் சந்தை நிா்வாக அலுவலா் பன்னீா்செல்வம் கூறியது: பொதுமக்கள் நலன் கருதி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் காய்கனி தொகுப்பு விற்பனையை தொடங்கியுள்ளோம். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல், எளிய முறையில் பல்வகை காய்கனிகள் கொண்ட தொகுப்பை வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT