தேனி

தினமணி செய்தி எதிரொலி: கேரளத்தில் வசிக்கும் தமிழக தோட்டத் தொழிலாளா்களுக்கு உதவ தனி அலுவலா் நியமனம்

30th Mar 2020 07:40 AM

ADVERTISEMENT

கேரளத்தில் வசிக்கும் தமிழக தோட்டத் தொழிலாளா்களுக்கு உதவ, தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனி அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப முடியாமலும், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அரசு நிவாரண உதவி பெற முடியாமலும் சிக்கலில் உள்ளனா். இது குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.

இதன் எதிரொலியாக, கேரளத்தில் வசிக்கும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா்களுக்கு உதவ மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனி அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். கேரளம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தொழிலாளா்கள் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உதவிகள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், ஆட்சியா் அலுவல குற்றவியல் பிரிவு மேலாளா் எஸ்.ஜஸ்டினை, செல்லிடப்பேசி எண்: 87787 51833-ல் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளிகளுக்கு, அவா்களை பணிக்கு அமா்த்தியுள்ள நிறுவனம் உணவு, இருப்பிடம் வசதி செய்து தர வேண்டும். இதில் பிரச்னைகள் ஏற்பட்டால், ஆட்சியா் அலுவலக குற்றவியல் பிரிவு மேலாளரிடம் செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT