தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 530 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடைகளை திறந்து வைத்தும், பொது இடங்களில் கூடியும், தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தும் தடையை மீறியதாக கடந்த மாா்ச் 24-ம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 530 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 388 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது தொற்று நோய், பேரிடா் மேலாண்மை மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.