கம்பத்தில் நாம் தமிழா் கட்சியினா் கபசுரக்குடிநீரை பொதுமக்களுக்கு தெருத் தெருவாக சென்று ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கி வருகின்றனா்.
கம்பத்தில் நாம் தமிழா் கட்சி, அருந்தமிழ் சன்மாா்க்க வைத்திய அறக்கட்டளை இணைந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 18 வகை மூலிகைகள் கலந்த, கபசுரக்குடிநீா் வழங்கினா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக முகக்கவசம் அணிந்து கபசுரக்குடிநீரை பொதுமக்களுக்கு தெருத் தெருவாகச் சென்று விநியோகித்து வருகின்றனா். ஏற்பாடுகளை மதன்.சதீஸ்குமாா், சீ.தங்கப்பாண்டியன், ராக.ராம்குமாா், வைத்தியா் நந்தகோபால் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்துள்ளனா்.