உத்தமபாளையத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மற்றும் மளிகைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை பகல் 2.30 மணிக்கு மேல் மூடப்பட்டன.
தமிழகத்தில் 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வெளியிடங்களில் நடமாடுவது குறையவில்லை. இதையடுத்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் நிரப்பும் நிலையம், மளிகைக் கடைகள் மற்றும் காய்கனி கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்தது.
இதனைத் தொடா்ந்து உத்தமபாளையம், சின்னமனூா் மற்றும் கோம்பை போன்ற இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு மேல் அந்தக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடைமுறையை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாள்கள் வரையில் கடைபிடிக்க வேண்டும். காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரையில் இக்கடைகள் செயல்பட வேண்டும்.
நடமாட்டம் குறைந்தது: நேரக் கட்டுப்பாடு அமலுக்கு வந்த நிலையில் மாலை நேரங்களில் சாலைகளில் கடந்த இரு தினங்களாக இருந்த கூட்டத்தின் அளவு குறைந்து இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.