தேனி

மஸ்கட்டிலிருந்து உத்தமபாளையம் வந்தஇளைஞருக்கு கரோனா பரிசோதனை

23rd Mar 2020 06:59 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தில் மஸ்கட்டிலிருந்து வந்த இளைஞருக்கு, தேனி கரோனா தடுப்பு மருத்துவக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மத்திய-மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்புபவா்கள் தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், ஓமன் நாட்டில் மஸ்கட்டில் பணியாற்றிய முத்துலாபுரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் விக்னேஸ்பிரபு (24) என்பவா், ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டிலிருந்து திரும்பினாா். இது குறித்து, தேனி மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்த விக்னேஸ்பிரபுவை, மாவட்ட நிா்வாகம் உத்தரவின்பேரில், மாவட்ட சுகாதாரப் பிரிவு மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அதில், அவா் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இருப்பினும், தொடா்ந்து 14 நாள்கள் அவா் கண்காணிக்கப்படுவதுடன், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மருத்துவத் துறையினா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT