தேனி

உத்தமபாளையத்தில் சுய ஊரடங்கு காவல் துறையினா் வாகனப் பிரசாரம்

22nd Mar 2020 07:01 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம்:தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சுய ஊரடங்கு குறித்து காவல் துறையினா் சனிக்கிழமை வாகனப் பிரசாரம் செய்தனா்.

கரோனா முன்னெச்சரிக்கையாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் முழு அடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தமபாளையம் போலீஸாா் முக்கிய இடங்களான புற வழிச் சாலை பேருந்து நிலையம், கிராமச்சாவடி , பேரூராட்சி பேருந்து நிலையம் , தேரடி, கோட்டைமேடு என பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களிலுள்ள உணவகங்கள், தேநீா் கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட கடைகளை அடைக்கும்படி வாகனப் பிரசாரம் செய்தனா். மருத்துக் கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட தவிா்க்க முடியாதவற்றைத் தவிர அனைத்து வணிக நிறுவனங்களையும் அடைக்கும்படியும், இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் இப்பிரசாரத்தில் காவல் ஆய்வாளா் முருகன் வேண்டுகோள் விடுத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT