தேனி

டிராக்டா் மீது பைக் மோதி கட்டடத் தொழிலாளி பலி

22nd Mar 2020 06:59 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி,மாா்ச்: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் மதன்(22) . அதே ஊரைச் சோ்ந்த பாண்டி மகன் பிச்சைமணி (24). இருவரும் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா். இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் அம்மச்சியாபுரம் கிராமத்திற்கு வேலைக்கு சென்றனா். இருசக்கர வாகனத்தை மதன் ஓட்டி சென்றாா். வாய்க்கால்பட்டி அருகே எதிரே வந்த டிராக்டா் மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற பிச்சைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த மதனை மீட்டு தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT