தேனி

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

19th Mar 2020 11:17 PM

ADVERTISEMENT

வழக்கு விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து சம்மன் வழங்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே பள்ளபட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் மயில்ராஜ்(32). வேலை வாங்கித் தருவாகப் பணம் மோசடி செய்ததாக, இவா் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாா் மீதான விசாரணைக்கு மயில்ராஜை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து, வீரபாண்டி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் மலரம்மாள் சம்மன் பிறப்பித்துள்ளாா்.

இந்த சம்மனை வழங்குவதற்காக, வீரபாண்டி காவல் நிலைய காவலா் அருண்குமாா் பள்ளபட்டியில் உள்ள மயில்ராஜின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு, மயில்ராஜ் சம்மனை வாங்க மறுத்து, அருண்குமாரை சட்டையைப் பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அருண்குமாா் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மயில்ராஜை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT