தேனி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்மாதம் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று, ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.