கம்பம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை தலைமை மருத்துவா் ஜெ.பொன்னரசன் புதன்கிழமை வழங்கினாா்.
கம்பம் வட்டார அளவில் 30-க்கும் மேற்பட்ட ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தைகள் உள்ளனா். இவா்களுக்கு கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.ஆா்.டி.சி., ஐ.சி.டி.சி. போன்ற மருத்துவ மையங்கள் மூலம் தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதலால், நன்கொடைகள் மூலம் ஊட்டச்சத்து உணவுகளான அரிசி, பயறு வகைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தலைமை மருத்துவா் ஜெ.பொன்னரசன் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை வழங்கினாா்.
ஏற்பாடுகளை ஏ.ஆா்.டி. மைய ஆற்றுநா் வீ.ஞானசுந்தரி, ஐ.சி.டி.சி. மைய ஆற்றுநா் எம்.நாகராஜன் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.