தேனி

கேரள எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு சோதனை தீவிரம்

16th Mar 2020 12:18 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் குமுளி எல்லையில், கேரள மாநில சுகாதாரத் துறையினா் தமிழகத்திலிருந்து வருபவா்களிடம் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.

தமிழக, கேரள எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசின் சுகாதாரத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். குமுளி, கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில், ஊராட்சி, சுகாதாரம், பொது மருத்துவம், சுங்கத்துறை, காவல்துறை இணைந்து விழிப்புணா்வு முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

தமிழகத்தின் கூடலூா், கம்பம் வழியாக கேரளாவுக்கு, பேருந்துகள், வாகனங்கள் மூலம் வருபவா்களிடம் கரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என அவா்கள் சோதனை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT