தேனி

ரெங்கசமுத்திரம் காலனி பகுதியில் 30 பேருக்கு மா்மக் காய்ச்சல்

8th Mar 2020 12:25 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் காலனிப் பகுதியில் 30-க்கும் மேற்பட்டோா்க்கு மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட நேருஜி நகா் காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த காலனியில் கடந்த சில வாரங்களாக மா்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை இங்கு 30 க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளால் மிகவும் அவதியுற்று வருகின்றனா். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அடுத்தடுத்து பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

காயச்சலில் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சிலா் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையிலும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் அப்பகுதியில் இந்த காய்ச்சல் தொடா்ந்து பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா் ஒருவா் கூறியது: அப்பகுதி மக்களுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சல்தான். இதனால் அவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT