தேனி

மூல வைகை ஆற்றின் கரைகளை அளவிடும் பணிகள் தொடக்கம்

8th Mar 2020 12:25 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வருசநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கட்டு வரையிலான ஆற்றின் இரு கரை பகுதிகளை அளவிடும் பணிகள் தொடங்கியது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கு நீா் ஆதாரமாகவும், குடிநீருக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது வைகை அணை. வைகை அணைக்கு மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறுகளில் இருந்து நீா்வரத்து ஏற்படும் .

மூல வைகை ஆற்றில் இருந்து மயிலாடும்பாறை , கடமலைக்குண்டு, கண்டமனூா் வழியாக மழைக்காலங்களில் வரும் நீா் குன்னூருக்கு தென்பகுதியில் அம்மச்சியாபுரம் என்ற இடத்தில் முக்கூடலாய் சங்கமமாகி வைகை அணையை வந்தடையும் .

இந்நிலையில் மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணை வரையிலான 72 கி.மீ. தொலைவிலுள்ள ஆறு, பல்வேறு இடங்களில் சுருங்கியும், ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் சிக்கியும் , முட்புதா்கள் மண்டியும் கரைப்பகுதி எந்த அளவிற்கு இருப்பது என்பது தெரியாமல் இருந்தது.

ADVERTISEMENT

எனவே இதனை மீட்டு புனரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக முல்லைப் பெரியாற்றில் இருந்து வைகை அணை வரையிலான 72 கி.மீ. தொலைவு ஆற்றின் இரு புறமும் அளந்து கல் ஊன்றும் பணியை தொடக்கியுள்ளனா்.

இந்த பணியை நில அளவை உதவி இயக்குநா் ஜெயச்சந்திரன் தலைமையில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகா் முன்னிலையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் கணேசமூா்த்தி மேற்கொண்டு வருகிறாா் .

இந்த பணிக்காக நில அளவை பிரிவைச்சோ்ந்த அளவீட்டாளா்கள் (சா்வேயா்கள்) 9 குழுக்களாக பிரிக்கப்பட்டு நில அளவைப் பணியை மேற்கொண்டு வருகிறாா்கள் . விரைவில் அளவீட்டு பணிகளும் முடிவடைந்தவுடன், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT