தேனி

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

8th Mar 2020 12:28 AM

ADVERTISEMENT

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்ட கணவா் சிகிச்சை பலனின்றி இறந்ததாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே வடுகபட்டியை சோ்ந்தவா் பரமசிவம் (40.) இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இறந்தாா். இதனால் மனஉளைச்சலில் இருந்த பரமசிவம், வெள்ளிக்கிழமை இரவு விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் சனிக்கிழமை இறந்து விட்டாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT