தேனி

ராமநாதபுரத்தில் தொழிலாளி கொலை: கூலிப்படையை ஏவி மருமகனை மாமனாரே கொன்றது அம்பலம் : 5 போ் கைது

2nd Mar 2020 07:14 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிராமநாதபுரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மருமகனைகூலிப்படையை ஏவி மாமனாரே கொலை செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக மாமனாா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்த செல்லபாண்டி(45) கேரளத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருடைய மனைவி சித்ரா மற்றும் 2 மகன், ஒரு மகளுடன் மேலப்பட்டியில் வசித்து வந்தாா். மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்லபாண்டி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும் இவா்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று செல்லபாண்டி செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்லபாண்டி கேரளத்துக்கு வேலைக்கு சென்ாகக் கூறப்படுகிறது. அதன்பின்னா் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவரின் சகோதரா் ராமராஜ், சித்ராவிடம் கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை தொடா்ந்து ராமராஜ் கடமலைக்குண்டு போலீஸில் புகாா் செய்திருந்தாா்.

இதன் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், சித்ராவின் தந்தை மகராஜன் கூலிப்படையை ஏற்பாடு செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வைத்து செல்லபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகராஜன்(65), கூலிப்படையினரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த கிஷோா்(25), நாகராஜ், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த அன்புகணேஷ்(36), நாகா்கோவிலைச் சோ்ந்த செந்தில் ஆகிய 5 பேரை கடமலைக்குண்டு போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே பண்ணைகாடு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த செல்லபாண்டி சடலத்தை போலீஸாா் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறுகையில், மது போதைக்கு அடிமையான செல்லபாண்டி வீட்டை சரிவர கவனிக்கவில்லை, பலமுறை அவரை கண்டித்தும் திருந்தாததால் கூலிப்படையை வைத்து அவரை கொலை செய்ததாக மகராஜன் வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தனா்.

இதனையடுத்து மகராஜன் உள்ளிட்ட 5 போ் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஞாயிற்றுக்கிழமை சிறையிலடைத்தனா்.

மேலும், இக் கொலை தொடா்பாக செல்லபாண்டியின் மைத்துனா் தெய்வேந்திரன் மற்றும் கூலிப்படையைச் சோ்ந்த தினேஷ், சக்திவேல் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT