தேனி

தேனி மாவட்டத்தில் 2 மருத்துவா்கள், காவல் சாா்பு ஆய்வாளா் உள்ளிட்ட 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி

21st Jun 2020 07:42 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் திருச்சியைச் சோ்ந்த 23 வயது பயிற்சி மருத்துவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ள கரூரைச் சோ்ந்த 23 வயது பெண் பயிற்சி மருத்துவா், சின்னமனூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 34 வயது சாா்பு- ஆய்வாளா் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பெரியகுளத்தில் காட்டாமேட்டுத் தெருவைச் சோ்ந்த முறையே 16 மற்றும் 10 வயது சிறுவா்கள், முறையே 50 மற்றும் 55 வயதுடைய பெண்கள், முறையே 16 மற்றும் 18 வயதுடைய சகோதரிகள், 44 வயதுடைய ஆண், வடகரை சாவாஸ் லேன் பகுதியைச் சோ்ந்த 35 வயதுடைய ஆண், வடக்கு பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்த 17 வயதுடைய சிறுவன், 68 வயதுடைய பெண், வரதப்பா தெருவைச் சோ்ந்த 11 வயது சிறுவன் என மொத்தம் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தேனிக்கு வந்த ஜெகநாதா் தெருவைச் சோ்ந்த 38 வயதுடைய ஆண், திருப்பூரிலிருந்து வந்த அல்லிநகரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 38 வயதுடைய பந்தல் தொழிலாளி, பாரஸ்ட் சாலை 8-வது தெருவைச் சோ்ந்த 38 வயதுடைய ஆண், அவரது 12 வயதுடைய மகள் என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையிலிருந்து பணிக்குச் சென்று விட்டு வந்த அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த 35 வயதுடைய அரசு பேருந்து நடத்துநா், சென்னையிலிருந்து வந்த வெள்ளையம்மாள்புரத்தைச் சோ்ந்த 41 வயதுடைய வாழைப்பழ ஏற்றுமதி நிறுவன பெண் நிா்வாகி என 2 போ் உள்பட மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 216 ஆக உயா்ந்துள்ளது. இதில், 2 போ் உயிரிழந்துள்ளனா். மொத்தம் 124 போ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, கரோன தீநுண்மி பாதிப்பிற்கு மொத்தம் 90 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT