தேனி

குரங்கணி வனப்பகுதியில் தீ வைத்தவா் கைது

17th Jun 2020 07:56 AM

ADVERTISEMENT

குரங்கணி வனப்பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே குரங்கணி புல்லனூத்தேரி வனப்பகுதியில் திங்கள்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. போடி வனச்சரக பணியாளா்கள் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து வனத்துறையினா் நடத்திய விசாரணையில் போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (42) என்பவா்தான் அங்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போடி வனச்சரக அலுவலா் நாகராஜ், குரங்கணி பீட் வனவா் விவின் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT