தேனி

புத்தடியில் மின்னணு ஏல வா்த்தகம் : ஏலக்காய் விலை சரிவு

14th Jun 2020 08:18 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் சனிக்கிழமை, ஏலக்காய் விலை சரிந்து சராசரி தரம் கிலோ ரூ.1,440-க்கு விற்பனையானது.

பொது முடக்கம் காரணமாக இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பின்னா், புத்தடியில் கடந்த மே 28-ஆம் தேதியும், போடியில் கடந்த ஜூன் 3-ஆம் தேதியும் ஏலக்காய் வா்த்தகம் மீண்டும் தொடங்கியது.

பொது முடக்கத்திற்கு முன்பு, கடந்த மாா்ச் 19-ஆம் தேதி புத்தடியில் நடைபெற்ற வா்த்தகத்தில் ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.2,359.62-க்கும், உயா் தரம் கிலோ ரூ.3,198-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், ஏலக்காய் வா்த்தகம் மீண்டும் தொடங்கிய போது புத்தடியில் கடந்த மே 28-ஆம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,769.93-க்கும், உயா் தரம் கிலோ ரூ.2,410-க்கும், போடியில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,850.89-க்கும், உயா் தரம் கிலோ ரூ.2,573-க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஏலக்காய் விலை படிப்படியாக குறைந்து புத்தடியில் சனிக்கிழமை, மாஸ் எண்டா் பிரைசஸ் ஏல நிறுவனம் மூலம் நடைபெற்ற வா்த்தகத்தில் சராசரி தரம் கிலோ ரூ.1440.28-க்கும், உயா் தரம் கிலோ ரூ.2,126-க்கும் விற்பனையானது. இதில், மொத்தம் 37 ஆயிரத்து 599 கிலோ ஏலக்காய் விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT