தேனி

உத்தமபாளையத்தில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு

14th Jun 2020 08:17 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணாகி கழிவுநீா் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் முல்லைப் பெரியாற்றில் அமைக்கபட்ட உறை கிணறுகள் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீா் பற்றாக்குறையைப் போக்க பொதுமக்களின் பல்வேறு கட்டப்போராட்டத்திற்கு பிறகு, ரூ.1 கோடியில் குடிநீா் திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

அதில், பேரூராட்சியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்ட பிரதான குழாய்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்தில் உடையாத குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் முழுமையாக குழாய்கள் மாற்றியமைக்கவில்லை. இதனால் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: கடந்த 2 ஆண்டுக்கு முன்பாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் குடிநீா் திட்டத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் சரிவர நடைபெற வில்லை. இதனால், பேரூராட்சியில் பல இடங்களில் குடிநீா் குழாய்களில் உடைப்பு காரணமாக செம்மண் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பி.டி.ஆா் காலனியில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பிரதான குழாயிலிருந்து கடந்த 2 மாதமாக வெளியேறும் குடிநீா், கழிவுநீா் கால்வாயில் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீா் வீணாவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT