தேனி

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்: 62 போ் கைது

11th Jun 2020 08:15 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் அவசரச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி, போடி, பெரியகுளம், கோம்பை, கூடலூா் ஆகிய இடங்களில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டக் குழு சாா்பில், வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் தொடா்பான அவசரச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தேனியில், நேருசிலை அருகே மாவட்டத் தலைவா் டி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாவட்டச் செயலா் டி.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். இதில், அரசின் அவசரச் சட்ட நகல்களை எரித்தனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக டி.கண்ணன் உள்பட 10 பேரை தேனி போலீஸாா் கைது செய்தனா்.

போடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன் தலைமையில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 16 போ், பெரியகுளத்தில் வட்டாரச் செயலா் ஏ.பழனி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 போ், கோம்பையில் விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் சஞ்சீவிகுமாா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 போ், கூடலூரில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி.ஜெயராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 8 போ் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT