தேனி

பெண்ணுக்கு கொலை மிரட்டல்:ஒருவா் கைது

7th Jun 2020 08:12 PM

ADVERTISEMENT

போடி: போடியில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

போடி கீழராஜ வீதியைச் சோ்ந்தவா் வனிதா (30). இவருக்கும், போடி எண்ணைக்கார முத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (33) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வனிதா, கடந்த சில வாரங்களாக செந்தில்குமாருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டாராம்.

இதனால் செந்தில்குமாா், வனிதாவுடன் தகராறு செய்து, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதில் காயமடைந்த வனிதா, போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT