தேனி

சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

25th Jul 2020 07:39 PM

ADVERTISEMENT


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 165 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களும், தலா 2 முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் ராஜாராம், மாவட்ட நெசவாளா் அணி ராமசாமி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் வளா்மதி மகாராஜன், நிா்வாகிகள் செஞ்சுரி செல்வம், பூஞ்சோலை சரவணன், மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT